வனபத்ரகாளியம்மன் கோவிலில் மாவிளக்கு சுமந்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2019 12:08
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழாவில் நேற்று மாலை, கோவிலை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்கள் மாவிளக்கை தலையில் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோவில் பூசாரி பக்தர்கள் தலையில் சுமந்து வந்த மாவிளக்குகளை, அம்மனுக்கு படைத்து பூஜை செய்தார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இரவு பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இன்று இரவு, 7:00 மணிக்கு பரிவேட்டை நிகழ்ச்சியில் அம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வருகிறார். தொடர்ந்து வாண வேடிக்கை நடைபெறுகிறது. 2ம் தேதி கொடியிறக்கமும், மஞ்சள் நீராட்டும், 3ம் தேதி ஆடி, 18ம் பெருக்கும், 5ம் தேதி, 108 திருவிளக்கு பூஜையும், 6ம் தேதி மறுபூஜையும் நடக்கிறது. பக்தர்கள் பங்கேற்று அம்மன் அருள் பெற கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.