பதிவு செய்த நாள்
01
ஆக
2019
01:08
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை பக்தர்கள் வழிபட்டனர்.கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், பத்ரகாளியம்மன் கோவில்களில், காலையில் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் பூஜைகள் நடந்தன.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உள்ள பேச்சியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஆனைமலை அருகேயுள்ள கணபதிபாளையம் கவுமாரி பத்ரகாளியம்மன் கோவிலில், அபிேஷகம் மற்றும் ஆராதனை பூஜைகள் நடைபெற்றன. கவுமாரி சாந்த ரூபினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பொள்ளாச்சி அம்பராம்பாளையம் ஆற்றங்கரையில், புரோகிதர்கள் வழிகாட்டுதலின் படி, முன்னோர்களுக்கு திதி கொடுத்து மக்கள் வழிபாடு செய்தனர்.*வால்பாறை அடுத்துள்ள நடுமலை துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவிலில் நேற்று மதியம், 1:00 மணிக்கு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்காரபூஜையும் நடந்தது.