பண்ணாரி கோவிலில் இரவு பூச்சாட்டு: ஏப்,10ம் தேதி பிரம்மாண்ட தீமிதி நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2012 11:03
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழாவுக்கான பூச்சாட்டு நிகழ்ச்சி இன்று இரவு நடக்கிறது.சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில், முக்கிய ஸ்தலமாகும். இக்கோவிலில் ஒவ்வொறு ஆண்டும் பங்குனி உத்திரம் நட்சத்திரம் அடுத்து வரும் செவ்வாய்கிழமை குண்டம் விழா நடப்பது வழக்கம். இவ்விழாவில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதிப்பார்கள். இந்தாண்டு குண்டம் விழாவுக்கான பூச்சாட்டு நிகழ்ச்சி இன்று இரவு நடக்கிறது. இதன் மூலம் குண்டம் விழா தொடங்குகிறது. நாளை இரவு 11 மணி முதல் பண்ணாரி அம்மன் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதியுலா சென்று திரும்பும். ஏப்ரல் மூன்றாம் தேதி கம்பம் நட்டுதல் விழா நடக்கிறது. அதையடுத்து ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு பக்தர்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடக்கும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதிப்பார்கள். பக்தர்களை அடுத்து கால்நடைகள் தீ மிதிக்கும். ஏற்பாடுகளை பண்ணாரி மாரியம்மன் கோவில் துணைஆணையர் நடராஜன் தலைமையில் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.