பதிவு செய்த நாள்
01
ஆக
2019
03:08
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வீரப்பநாய்க்கன்பட்டி பஞ்., பாளையத்தில் உள்ள ஏக்கிலிச்சி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த ஜூன், 6ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள், மஹா கும்பாபிஷேகம், அம்மன் தேர் பவனி, கரகாட்டம், வாண வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. விழா நிறைவாக நேற்று (ஜூலை., 31ல்)சுவாமிக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இறுதியில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஊர்மக்கள் உட்பட, பலர் பங்கேற்றனர்.