பதிவு செய்த நாள்
01
ஆக
2019
03:08
மேட்டூர்: ஆடி அமாவாசையில், மேட்டூர் காவிரி கரையோரம், ஏராளமானோர், முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுத்தனர். தட்சிணாயன புண்ணிய நதி என அழைக்கப்படும் காவிரியாற்றின் கரை யோரம், ஆடி அமாவாசையில், முன்னோர்க்கு தர்ப்பணம் செய்வது புண்ணியம் என, இந்துக் கள் கருதுகின்றனர். அதன்படி, நேற்று (ஜூலை., 31ல்), பல்வேறு பகுதி களில் இருந்து, மேட்டூர் வந்த பலர், காவிரி கரையோரம், ஆங்காங்கே அமர்ந்து முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதை யொட்டி, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சேலத்தில்...: சேலம், சுகவனேஸ்வரர் கோவில் பிருந்தாவனத்தில், பலர், தங்கள் முன்னோர் க்கு, ’தில தர்ப்பணம்’ எனும் எள் தண்ணீர் வார்த்து, வழிபாடு நடத்தினர். கோவில் குருக்கள் மந்திரங் கள் ஓதி வழிநடத்த, அதை பின்பற்றி, வழிபாட்டினை நடத்தினர். அதேபோல், கந்தாஸ் ரமம் நீரோடை, மூக்கனேரி, கன்னங்குறிச்சி புது ஏரி, அம்மாபேட்டை ஏரி உள்ளிட்ட பல்வேறு இடங் களில், முன்னோர் வழிபாடு நடத்தினர்.