தேனி:தேனி, எம்.சி.கே.எஸ்., பிராண சிகிச்சை மையத்தில் ஹீலிங் மற்றும் ஆர்ஹாடிக் யோகா இலவச பயிற்சி வகுப்புக்கள் நடந்தது.’எனர்ஜி’ பற்றிய அறிமுக உரை, இரு இருதய தியான வகுப்புக்கள் நடந்தன. இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பயிற்றுனர்கள் ஷீலாபிரியா, ஞான சவுந்திரி தலைமையில் பிராண சிகிச்சை ஒருங்கிணைப் பாளர்கள் ,தன்னார்வலர்களால் வகுப்புக்கள் நடந்தப்பட்டது.ஞானசவுந்தரி கூறுகையில், எங்களது மையத்தில் வெள்ளிக்கிழமை தோறும் இலவசமாக பிராண சிகிச்சை மற்றும் இரு இருதய தியானங்கள் கற்றுத் தருகிறோம். நம் சக்தி, உடலை பேணிக்காக்க வரவேற்கிறோம். 99421 52891 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,”என்றனர்.