பதிவு செய்த நாள்
03
ஆக
2019
01:08
மாங்காடு: மாங்காடு, காமாட்சி அம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு, நேற்று, 1,008 கலச அபிஷேகம் நடந்தது. குன்றத்துாரை அடுத்த மாங்காட்டில், பிரசித்தி பெற்ற, காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு, இக்கோவிலில், நேற்று காலை, சிறப்பு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, 1,008 கலச அபிஷேகம் நடந்தது. இதில், பல்வேறு பகுதி களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மன் அருளை பெற்றனர். பக்தர்கள் கொண்டு வந்த வளையல்கள், அம்மனுக்கு மாலையாக சாத்தப் பட்டது.