மோகனூர்: ஆடி, மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் அறக்கட்டளை சார்பில், மோகனூர் மாரியம்மன் சுவாமிக்கு, சிறப்பு வளைகாப்பு விழா மற்றும் குத்துவிளக்கு பூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, குத்துவிளக்கு பூஜை நடந்தது. அதையடுத்து, சுவாமிக்கு வளைகாப்பு செய்யப்பட்டது. வளையல் அலங்காரத்தில், சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது.