பதிவு செய்த நாள்
03
ஆக
2019
02:08
அன்னுார்: ஆடி மூன்றாவது வெள்ளியான நேற்று (ஆக., 2ல்) அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன திரளான சுமங்கலி பெண்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.
அன்னுார்: தென்னம்பாளையம் ரோடு மாரியம்மன் கோவிலில் மதியம், அம்மனுக்கு ஆப்பிள், அன்னாசி, பேரீச்சை, மங்குஸ்தான், ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, கொய்யா உள்ளிட்ட,19 வகை கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
பிள்ளையப்பம்பாளையம் செல்வ நாயகியம்மன் கோவிலில் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டி ருந்தது. சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
* மன்னீஸ்வரர் கோவிலில் அருந்தவச்செல்வி அம்மன் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.மேட்டுப்பாளையம்
* காட்டூர் பெருமாள் லே அவுட்டில் உள்ள தவிட்டு மாரியம்மன் வளையல் அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஆடிவெள்ளியை முன்னிட்டு இக்கோவிலில் நேற்று (ஆக., 2ல்) முன்தினம் இரவு, 9:00 மணிக்கு அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு மங்கல பொருட்கள் வழங்கப்பட்டது.
* பழைய சந்தைக்கடை மைக்கண் மாரியம்மன் கோவிலில் நேற்று (ஆக., 2ல்) ஆடி வெள்ளி யை முன்னிட்டு, அம்மனுக்கு மங்களாம்பிகை அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
* காமராஜ் நகரில் உள்ள தேவி கருமாரியம்மன் உடனமர் அஷ்டதாராலிங் கேஸ்வரர் கோவி லில், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
வனபத்ரகாளியம்மன் ஆடிக்குண்டம் விழாவையொட்டி, அம்மனுக்கு அலங்கார பூஜையும், இரவு 8:00 மணிக்கு பரிவேட்டை நடந்தது. அம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத் தொடர்ந்து வாண வேடிக்கை நடந்தது.நேற்று (ஆக., 2ல்0 மாலை, கொடி இறக்கப்பட்டு, மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது.
14 வது நாள் திங்கட்கிழமை காலை, 10:00 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜையும், 15 ம் நாள் காலை மறுபூஜையும் நடைபெறுகிறது.சூலுார்சூலுார் அடுத்த கரடிவாவி ஸ்ரீ வீரமாத்தியம்மன் கோவிலில், பால், தேன், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அம்மனுக்கு திரவிய அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தன. சூலுார் வட்டார அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* சோமனுாரை அடுத்த ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. மதுரை மீனாட்சி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* காடாம்பாடி ஏரோநகர் சாந்த சிவ காளியம்மன் கோவில், சோமனுார் சேடபாளையம் ரோடு ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்களில் நடந்த ஆடிவெள்ளி பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
பெரியநாயக்கன்பாளையம்:
* அருகே எண். 4 வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
காமராஜ் நகரில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நரசிம்மநாயக்கன்பாளையம் சக்தி மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
அனுவாவி சுப்பிரமணியர் கோவில் அருகே உள்ள பெரியதடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை அம்மன் கோவிலில் ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரிக்கும், திருக்கயிலை நாதன் ஸ்ரீ காமேஸ்வரருக்கும் திருமண வைபவ நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி சிறப்பு ஸ்ரீ சுயம்வர பார்வதி ஹோமம் நடந்தது. நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் லலிதாம் பிகை பீடம் மாதா ராஜராஜேஸ்வரி, சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி, முதன்மை செயல் அலுவலர் பாலா ஜெகன்னாதன் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.