பதிவு செய்த நாள்
03
ஆக
2019
02:08
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதி அம்மன் கோவில்களில், ஆடி வெள்ளி யை முன்னிட்டு, சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்.ஆடி மாதம் அம்மனு க்கு உகந்த மாதமாக கொண்டாடப்படுகிறது. அம்மன் கோவில்களில், ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.நேற்று (ஆக., 2ல்), மூன்றாவது ஆடி வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் வழிபாடு நடந்தது. அம்மனுக்கு நான்கு கால வழிபாடு நடந்தது.கணபதிபாளையம் கவுமாரி பத்திரகாளியம்மன் கோவிலில், சந்தன அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர் களுக்கு, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது.கோட்டூர், பழனியூர் மாகாளியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அம்மன் சந்தன அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோட்டூர் கமல காமாட்சியம்மன் கோவிலிலும் அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நான்கு கால வழிபாடு நடந்தது.சேத்துமடை தெய்வகுளம் காளியம்மன் கோவிலில், அம்மனுக்கு அலங்கார வழிபாடு நடந்தது. மற்ற கோவில்களில் இருந்து சென்ற பக்தர்கள், தெய்வகுளத்தில் தீர்த்தம் எடுத்து, பூஜை செய்து அம்மனை வழிபட்டு, தீர்த்தம் எடுத்து வந்தனர்.சூலக்கல் மாரியம்மன் கோவிலில் நேற்று (ஆக., 2ல்), அதிகாலை முதலே, பெண்கள் கூட்டம் நீண்ட வரிசையில் அம்மனை தரிசிக்க காத்திருந் தனர்.
காலை, 7:30 மணிக்கு, திருநீரு, மஞ்சள், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம், இளநீர், நல்லெண் ணைய் உள்ளிட்ட, 30 வகையான அபிஷேகம் நடந்தது. அதன்பின், அம்மனுக்கு மஞ்சள் காப்பு அணிவித்து, மலர் அலங்காரத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது.பக்தர்களுக்கு, மஞ்சள், குங்கு மம், மஞ்சள் கயிறு, எலுமிச்சை மற்றும் மலர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பக்தர்கள் நேர்த்திக்கடனாக, கம்மங்கூழ் மற்றும் அன்னதானம் வழங்கினர்.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் காசிவிஸ்வநாதர் சன்னதியில் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையும் நடந்தது.அண்ணாநகர் முத்து மாரியம்மன் கோவிலில் நேற்று (ஆக., 2ல்) மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவிலில் காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது.