குமாரபாளையம்: ஆடி வெள்ளியையொட்டி, குமாரபாளையம் அம்மன் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது. கோட்டைமேடு காளியம்மன், சவுண்டம்மன், மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், பண்ணாரி மாரியம்மன், அங்காளம்மன், அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில் உள்ள மஞ்சமாதா உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடந்தது. ராஜா வீதி காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு தங்கக் கவசத்தால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற, கோவிலுக்கு வந்த கூழ் ஊற்றினர்.