பதிவு செய்த நாள்
03
ஆக
2019
03:08
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில், ஆடி மூன்றா வது வெள்ளியையொட்டி, நேற்று (ஆக., 2ல்) சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பெண்கள் கூழ் மற்றும் பொங்கலை அம்மனுக்கு படைத்து, பின் பக்தர் களுக்கு வழங்கினர். இதே போல், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில், காலையில் சிறப்பு பூஜை செய்து அம்மனுக்கு பல்வேறு பழங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டி ருந்தது. ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், அம்ம னுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது.
* தர்மபுரி அடுத்த செந்தில் நகரில் உள்ள புற்றுகோவிலில் உள்ள புற்றில், பால், முட்டை, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொடிகளை தூவி, புற்றை சுற்றி வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு, நேற்று (ஆக., 2ல்) ஏராள மான பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், லளிகம் ஓம்சக்தி மன்றம் சார்பில், நேற்று (ஆக., 2ல்) காலை தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
பக்தர்கள் தீச்சட்டி முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். மேலும், இக்கோவிலின், 28வது ஆண்டு விழாவும் நேற்று (ஆக., 3ல்)நடந்தது. இதேபோல், கோட்டை கல்யாண காமாட்சி அம்மன், வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.