பண்ருட்டி அருகே வீரட்டானேஸ்வரர் கோவிலில் அம்மன் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2019 04:08
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் இன்று (ஆக., 3ல்) தேரோட்டம் நடக்கிறது.
பண்ருட்டி அடுத்த திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தன்று பெரிய திருத்தேரோட்டவிழாவும், ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் அம்மன் திருத் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த பல ஆண்டுகளாக அம்மன் திருத்தேர் பழுதானதால் சகடை மூலம் தேரோட்டம் நடந்து வந்தது.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், அம்மன் திருத்தேர், அறநிலையத் துறை மற்றும் உபயதாரர் உதவியுடன் பணி முடிக்கப்பட்டு, வெள்ளோட்டம் நடந்தது.
அம்மன் திருத்தேரோட்டம் பல ஆண்டுகளுக்கு பிறகு இன்று (ஆக., 3ல்) நடக்கிறது. விழாவை யொட்டி காலை 6:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடக்கிறது.
காலை 7:15 மணிக்கு அம்மன் திருத்தேரில், உற்சவர் அம்பாள் பெரியநாயகி சிறப்பு அலங் காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 7:30 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.