பதிவு செய்த நாள்
27
மார்
2012
11:03
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா நாளை (மார்ச் 28) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சிவகங்கை, தாயமங்கலம் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். நேர்த்தி செலுத்த மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.
கொடியேற்றம்: இக்கோயிலில் பங்குனி திருவிழா நாளை இரவு 10.35 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மார்ச் 29 காலை 8.45 மணிக்கு லட்சார்ச்னை நடைபெறும். தினமும் அம்மன் இரவு 10 மணிக்கு சிம்மம், காமதேனு, அன்னம், பூத வாகனங்களில் புறப்பாடு நடக்கும். ஏப்., 4 ல் காலை 6 மணிக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்தி செலுத்துவர். ஏப்.,5 அன்று மாலை 6.55 மணிக்கு தேரோட்டம், ஏப்.,6 காலை 7.35 மணிக்கு பால்குடம், மாலை ஊஞ்சல் உற்சவம் நடக்கும். இரவு 10 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்மன் எழுந்தருள்வார். ஏப்.,7 இரவு 8 மணிக்கு தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறும். பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியார் தலைமையில் ஏற்பாடுகள் நடக்கிறது.