சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2019 06:08
திருநெல்வேலி: சங்கரன்கோவில் சங்கரநாராயணர், கோமதியம்பாள் கோயிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், சங்கரலிங்கசுவாமி, சங்கரநாராயணராக கோமதியம்பிகைக்கு காட்சியளித்த ஸ்தலம். சைவமும், வைணவமும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் கோயிலாகும். சங்கரன்கோவில் சங்கரநாராயணர், கோமதியம்பாள் கோயிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சைவமும், வைணவமும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் கோயிலாகும். ஆடித்தபசு திருவிழாவையொட்டி நேற்று கோமதிஅம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் , இரவில் சுவாமி அம்மாள் வீதி உலாவும் நடக்கிறது. முக்கிய விழாவான தேரோட்டம் ஆக. 11 காலையில் நடக்கிறது. ஆடித்தபசு திருவிழா ஆக.13 மாலை 6:00 மணிக்கு நடக்கிறது.