வாலிநோக்கம்: மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயிலில் உலக நன்மைக்காகவும், மழைபெய்ய வேண்டி 108 சங்காபிஷேகம் நடந்தது. நேற்று காலை ஆடிப்பூரத்தை முன்னிட்டு மூலவர்களுக்கு விஷேச தீபாராதனை நடந்தது. 108 இடம்புரி சங்குகளில் புனித நீர் ஊற்றப்பட்டு, சிவ சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்தனர். மூலவர் பூவேந்தியநாதருக்கு சங்கில் உள்ள புனித நீரால் அபிஷேக ஆராதனை நடந்தது.விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு தாம்பூல பிரசாதம், வளையல்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதானக்கமிட்டியினர் செய்திருந்தனர்.