விருத்தாசலம்: செங்கழனி மாரியம்மன் கோவிலுக்கு, பெண் பக்தர்கள் கஞ்சிக்கலயம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவிலில், ஆடி மாத செடல் திருவிழா, கடந்த 21ம் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு அலங்கரித்த வாகனங்களில் வீதியுலா நடந்தது. நேற்றுமுன்தினம் (ஆக., 3ல்) மணிமுக்தாற்றில் இருந்து செவ்வாடை பக்தர்கள் கஞ்சிக்கலயம் சுமந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, கோவிலில் கஞ்சிவார்த்தல், சிறப்பு ஆராதனை நடந்தது.