கடலுார் பாடலீஸ்வரர், வரதராஜ பெருமாள், ஆடிப்பூர சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2019 02:08
கடலுார்:கடலுார் பாடலீஸ்வரர், வரதராஜ பெருமாள், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில்களில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடு நடந்தது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் பெரியநாயகி அம்மனுக்கு, நேற்று முன்தினம் (ஆக., 3ல்) காலை 10 மணிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு பராசக்தி அம்மனுக்கு வளையல்காப்பு யாக உற்சவம் நடந்தது. ஒரு மணியளவில் அம்மனுக்கு தீர்த்தவாரி நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் புறப்பாடு நடந்தது.
ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாள் பெருமாளுக்கு ஆடிப்பூர திருமஞ்சனம் நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி கோவில் புறப்பாடு நடந்தது.திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில்,காலை 6 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு பிரசாத மகா நிவேதனம் நடந்தது. மாலை 4 மணிக்கு சேவை சாற்றுமுறை, 5 மணிக்கு பெருமாள் ஆண்டாள் வீதியுலா நடந்தது. இரவு பள்ளியறை சேவையில் வித்வான் தியாகராஜ குழுவினரின் கர்நாடக சங்கீத நிகழ்ச்சி நடந்தது.