மயிலம்:-மயிலம் அடுத்த ஆலகிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. ஆலகிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் திருவிழா கடந்த ஜூலை 28 ம் தேதி காப்பு கட்டுத லுடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் வீதியுலா நடந்து வருகிறது. நேற்று (ஆக., 4ல்) மதியம் 12:00 மணிக்கு துரியோதனன் படுகள காட்சி தெருக் கூத்து நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் ரசித்து பார்த்தனர். காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு தேன், இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களினால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மாலை 6:00 தீமிதி விழா வில் ஏராளமான பக்தர்கள் விரமிருந்து மஞ்சள் ஆடை அணிந்து தீமித்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.