மயிலம்:மயிலம் அடுத்த செண்டூர் மாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவம் நடந்தது.செண்டூர் மாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவத்தை முன்னிட்டு காலை 6:00மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது.
பின்னர் செண்டூர் குளக்கரையிலிருந்து பக்தர்கள் பூங்கரகத்தை முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர். மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு அபிஷேகம்,தீபாரனைகள் நடந்தது. நேற்று (ஆக., 4ல்) மாலை 6:00 மணிக்கு பால், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட நறு மணப் பொருட்களினால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் அலகு போட்டுக் கொண்டும், செடல் உற்சவத்தில் பங்கேற்றனர்.தொடர்ந்து உற்சவர் அனைத்து வகையான பழங்களினால் செய்த சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.