சாயல்குடி:சாயல்குடி வணிக வைசிய உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட சக்தி மாரியம்மன் கோயிலில் ஆடிப்பொங்கல் விழா நடந்தது.
கடந்த ஜூலை 26 அன்று காப்புகட்டுதலுடன் விழா துவங்கியது. ஜூலை 30 அன்று மாலையில் 504 விளக்கு பூஜையும், ஆக., 2 வெள்ளியன்று நேர்த்திக்கடன் பக்தர்களால் அக்னிச்சட்டி பூக்குழி இறங்குதலும், பகலில் அன்னதானமும் நடந்தது.முளைப்பாரி ஊர்வலமும், உற்ஸவர் அம்மனுக்கு பூச்சொரிதலும் நடந்தது. காலையில் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டனர். ஏற்பாடுகளை வணிக வைசிய உறவின்முறையினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.