ராமநாதபுரம்:ராமநாதபுரம் ரயில்வே பீடர்ரோடு பகுதியில் உள்ள தவயோகி மவுன குருசுவாமி கள் 111வது குருபூஜை நடந்தது.காலை 7:00 மணிக்கு கொடியேற்றத் துடன் துவங்கியது.
அனுமதி வழிபாடு, கணபதி ேஹாமம், தொடர்ந்து வேத பாராயணம், திருமுறை பாராயணம், விசேஷ அபிேஷக அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு திருமுறை இன்னிசையும், செம்படையார்குளம் தலைமையாசிரியை எல்.விமலா இறைவணக்கம் பாடினார். ’குருவருள்’ என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. ஞானேஸ்வர தீர்த்த சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மவுன குரு மடாலய அறங்காவலர் ஆர்.சோமநாதன், ஆர்.சதாசிவம், பாக்கியம், எல்.முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கே.ராமகிருஷ்ண அடிகளார் செய்திருந்தார்.