காட்டுமன்னார்கோவில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2019 02:08
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் உடையார்குடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று முன்தினம் (ஆக., 4ல்) நடந்தது.
காட்டுமன்னார்கோவில் உடையார்குடியில் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா, கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனை நடந்து வந்தது.
தினமும் இரவு மாரியம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதை தொடர்ந்து 2 ம் தேதி மதியம் திருக் கல்யாணமும், அன்று இரவு புஷ்ப பல்ல க்கு வீதி உலாவும் நடந்தது. தேர்த்திருவிழா நேற்று முன்தினம் (ஆக., 4ல்) நடந்தது. நான்கு மாட வீதிகளின் வழியாக தேர் சென்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை உடையார்குடி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.