திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் தேரடி விநாயகர் கோவிலில் 34ம் ஆண்டு சந்தனக்காப்பு விழா நடந்தது.
திருக்கோவிலூர் கீழையூர் தேரடி விநாயகர் கோவிலில் 34ம் ஆண்டு சந்தனக்காப்பு விழா 3ம் தேதி துவங்கியது. மாலை 4:00 மணிக்கு அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு சுவாமி காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது மாலை 7:00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்தில் சோடசோபவூபச்சார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நாதஸ்வர, தவில் வித்துவான்களின் கச்சேரியுடன், உற்சவர் சுப்ரமணியர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தத. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.