தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூரில் உள்ள வீரமாத்தியம்மன் கோவிலில், கரகம் அழைத்தல் விழா நடந்தது.
தொண்டாமுத்தூரில் வாய்க்கால் அருகில் அங்காளம்மன், வீரமாத்தியம்மன், கருப்பராயன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித் திருவிழா நேற்று தொடங்கியது. நேற்று கணபதி ஹோமம், அனிகூடை அழைத்தல், சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று காலை எட்டு மணிக்கு குளத்துப்பாளையம் பெரிய விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கரகம் அழைத்து வரப்பட்டது. இதில், பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடங்களும், தீர்த்த குடங்களும் எடுத்து வந்தனர். சிறப்பு அலங்கார அபிஷேக பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.