மரச்சீனி கிழங்கை ’ஏழிலை கிழங்கு’ என்பர். மரச்சீனியின் இலைக் கொத்தில் ஏழு இலைகள் இருக்கும். இந்த இலையைப் பயன்படுத்தியே ஆண்டாளின் கையிலுள்ள கிளி செய்யப்படுகிறது. இதற்காக ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலில் உள்ள நந்தவனத்தில் மரச்சீனி செடிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் இலையில் கிளியின் உடலும், மாதுளை மொட்டால் கிளி மூக்கும், நந்தியாவட்டையால் சிறகும், காக்கா பொன்னால் கண்களும் தயாராகிறது. தினமும் புதிய கிளி ஒன்று ஆண்டாளின் கையில் வைக்கப்பட்டு, மறுநாள் பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படும். இதை வீட்டில் வைத்து வழிபட்டால் கன்னியருக்கு திருமண யோகம் உண்டாகும்.