அறிமுகம் இல்லாதவர்கள் மரணமடைந்தால் கூட இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க வேண்டும். இதனால் மரணித்தவரின் குடும்பத்திற்கும், பங்கேற்பவரின் குடும்பத்திற்கும் இடையே புதிய உறவு ஏற்படும். குடும்பத்தில் சண்டை வரும்போது, “நீ செத்தால் கூட உன் முகத்தில் விழிக்க மாட்டேன்” என கோபத்தில் சொல்வார்கள். சொன்னபடி பங்கேற்க மாட்டார்கள். இதனால் குடும்பங்களுக்கு இடையே பகை வளரும். கோபம் இருந்தாலும் கூட, தன்னால் வெறுக்கப்பட்டவர் மரணமடைந்தால் அதில் பங்கேற்க வேண்டும். இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் அடக்கம் செய்யும் வரை காத்திருக்க வேண்டும். இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவருக்கு ஒரு மடங்கு நன்மையும், அடக்கம் செய்யப்படும் வரை இருப்பவருக்கு இரு மடங்கு நன்மையும் கிடைக்கும்.