ஹாதீம்- என்றொரு வள்ளல் இருந்தார். சுயநலக் கூட்டம் ஒன்று அவரைப் பயன்படுத்த எண்ணியது. அவர் என்ன சொன்னாலும், செய்தாலும் வானளாவப் புகழ்ந்தது. இதை புரிந்து கொண்ட ஹாதீம், தம்முடைய காதுகள் கேட்கும் திறனை இழந்தது போல நடிக்கத் தொடங்கினார். சுற்றியிருந்தவர்களோ அவரது குறைகளை வெளிப்படையாக பேசினர். தன்னைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பாக இதனை, ஹதீம் பயன்படுத்திக் கொண்டார். மற்றவர்கள் புகழ்கிறார்களே என மகிழ்வதை விட, நம் குறைகளை அறிந்து களைவதே முன்னேற்றத்திற்கான வழி.