பணக்காரர் ஒருவரின் மாந்தோப்புக்கு பணியாளர் தேவைப்பட்டார். ஒருநாள் இப்ராகிம் என்ற ஞானி, வேறு ஒரு விஷயமாக அவரை காண வந்தார். பணக்காரருக்கு இப்ராகிமை தெரியாததால், தோட்டத்தில் வேலை செய்ய தயாரா எனக் கேட்டார். இதுவும் இறைவனின் விருப்பம் எனக் கருதி, இப்ராகிம் ஒப்புக்கொண்டார். ஒருநாள் பணக்காரரை அவரது நண்பர்கள் பார்க்க வந்தனர். அவர்களுக்கு மாம்பழம் பறிக்கும்படி பணக்காரர் உத்தரவிட, இப்ராகிமும் பறித்தார்.. அவற்றை சாப்பிட்ட நண்பர்கள் புளிப்பு தாங்காமல் முகம் சுளித்தனர். “இவ்வளவு நாள் பணி செய்தும் எந்த மரத்தில் பழம் இனிக்கும் என தெரியாதா?” என கோபித்தார் பணக்காரர். “ஐயா! காவல் பணியைத் தான் என்னிடம் ஒப்படைத்தீர்கள். பழங்களை சாப்பிட்டு ருசியை அறிய அனுமதி அளிக்கவில்லை” என்றார்.இப்ராகிமின் நேர்மையைக் கண்ட பணக்காரர் வியப்பில் ஆழ்ந்தார்.