திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட ஜெயந்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2019 11:08
கடலுார்: திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட ஜெயந்தி விழா நேற்று நடந்தது.
திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட ஜெயந்தி விழா நேற்று காலை 7 மணிக்கு வேதபாராயணத்துடன் துவங்கியது. தொடர்ந்து 8 மணிக்கு சிறப்பு ேஹாமம் நடந்தது. 12 தீபாராதனை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் கருட பகவானுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இரவு பெருமாள் மற்றும் கருடன் எதிர்சேவை புறப்பாடு மற்றும் புஷ்பயாகம் நடந்தது. செயல் அலுவலர் முத்துலட்சுமி, தக்கார் சுபத்ரா கலந்து கொண்டனர். விழாவில் பக்தர்களுக்கு தினமலர் மற்றும் சூப்பர் ருசிபால் சார்பில் அழகிய வழுவழு தாளிலான கருடன் வண்ணப்படம் வழங்கப்பட்டது.