புதுச்சேரி : சின்ன கோட்டக்குப்பம், பச்சைவாழியம்மன் கோவில் ஆடித்திருவிழாவில் நேற்று (ஆக., 7ல்) அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.புதுச்சேரி அடுத்த சின்ன கோட்டக்குப்பம் கன்னியக்கோவிலில் அமைந்துள்ள பச்சைவாழியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.முக்கிய உற்சவமான தீமிதி நேற்று முன்தினம் (ஆக., 6ல்) நடந்தது. நேற்று (ஆக., 7ல்) அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதையொட்டி, அம்மன் அலங்கரிக்கப்பட்டு, தாலாட்டுகளுடன், கோவில் வெளிப்பிரகாரத்தில் உலா வந்தது.