பதிவு செய்த நாள்
08
ஆக
2019
03:08
வீரபாண்டி: திருவிழாவை நடத்துவதில், ஆர்.டி.ஓ., தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டது. இதனால், சிறப்பு உண்டியல் வைக்கப்பட்டது.
ஆட்டையாம்பட்டி, வேலநத்தம் பாவடியிலுள்ள, செங்குந்தர் சமுதாயத்துக்கு சொந்தமான சின்ன மாரியம்மன் கோவிலுக்கு, ஊர் பெரியதனக்காரர், காரியக்காரர்கள் தேர்வு செய்யப் படாததால், ஆடித்திருவிழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுதொடர்பாக, இருதரப்பினர், ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்து, பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப் படவில்லை. இதனால், ஆர்.டி.ஓ., தலைமையில் பேச்சு வார்த்தை நடத்த, போலீசார் பரிந் துரைத்தனர். நேற்று முன்தினம் (ஆக., 6ல்), சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், இருதரப்பினர் இடையே நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
அதன்படி, நடப்பாண்டு ஆடி திருவிழாவை, குதிரை வைத்து சக்தி அழைத்து, கம்பம் நடுவது, எடுப்பது என, வழக்கமான உற்சவங்களை கோவில் பூசாரிகளை வைத்து மட்டும் நடத்துவது; பக்தர்கள் தரும் காணிக்கையால், விழாவை நடத்த, சிறப்பு உண்டியல் வைப்பது; தினமும், உண்டியலில் சேரும் தொகையை, இருதரப்பினர் முன், எண்ணி செலவு செய்து கொள்ள வேண்டும். மற்றபடி எந்த நிகழ்ச்சிகளையும், இருதரப்பினரும் நடத்தக்கூடாது; சுவாமி கும்பிட வருபவர்களை, யாரும் தடுக்கக்கூடாது. மீறுவோர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று (ஆக., 7ல்þ காலை, கோவிலில் சிறப்பு உண்டியலை, போலீசார் முன்னிலையில் வைத்து, பக்தர்கள் காணிக்கை செலுத்தினர்.