விழுப்புரம்:வாணியம்பாளையம் கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் ஆடி உற்சவம் நடந்தது. விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம் கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் கோவிலில், ஆடி மாத உற்சவத்தையொட்டி, கடந்த 6ம் தேதி காலை 9:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன், சுவாமி வீதியுலா நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.