சங்கராபுரம் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2019 03:08
சங்கராபுரம்:சங்கராபுரத்தில் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. சங்கரா புரம் பங்களா தெருவில் மாரியம்மன் கோவில் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப் பட்டது.
இக்கோவிலில் நேற்று (ஆக., 7ல்) சாகை வார்த்தல் விழா நடந்தது. அதனையொட்டி காலையில் அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.பகல் 12:00 மணிக்கு பக்தர்கள் கஞ்சிப்பானைகளுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, தீபாராதனைக்குப் பின்னர் கூழ் ஊற்றினர். ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.