முதுகுளத்துார்: முதுகுளத்துார், துாரி, செல்வநாயகபுரம் கிராமத்தினருக்கு பாத்தியப்பட்ட செல்வி அம்மன் கோவில் 43ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு 4ம் நாள் நிகழ்ச்சியாக 2008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விளக்கு பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் மேலத்துாவல் கிராமம் தமிழ்ச்செல்வம்-முத்துலெட்சுமி சிவசிவ கன்ஸ்ட்ரக்ஷன் குடும்பத்தினர் வழங்னர். பின் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விளக்கு பூஜையை முன்னிட்டு 5000 பேருக்கு பொது அன்னதானம் நடந்தது. முதுகுளத்துார் சுற்றியுள்ள ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.