மானாமதுரை: மானாமதுரை கன்னார் தெரு முத்துமாரியம்மன் கோவில் ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு ஏராளமானோர் பால்குடம், அலகுகுத்தி பூக்குழி இறங்கினர். மானாமதுரை கன்னார் தெரு முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 2 ந் தேதி ஏராளமானோர் தங்களது கைகளில் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. நேற்று காலை 10:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பலர் அலகு குத்தியும், ஊர்வலமாக வந்து கோயில் முன் பூக்குழி இறங்கி அம்மனை வழிபட்டனர். கோயிலில் பொங்கல்வைத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்தனர். தொடர்ந்து கோயில் முன்அன்னதானம் நடந்தது.இன்று முளைப்பாரி வீதிவுலா நடைபெற உள்ளது. நாளை அம்மனுக்குமஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்துவருகின்றனர்.