அவிநாசி அருகே புற்றுக்கண் மாரியம்மன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2019 02:08
அவிநாசி:சேவூரில் உள்ள புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் ஆடிமாதம், நான்காவது வார திருவிழா நேற்று (ஆக., 9ல்) நடந்தது.இதையொட்டி, காலை, 5.00 மணிக்கு மஹா கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. 7:00 மணிக்கு புற்றுக்கண் மாரியம்மனுக்கு சிறப்பு அலங் காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடத்தப்பட்டது. 10:00 மணிக்கு, சேவூர் கைகாட்டி பகுதியில் அமைந்துள்ள செம்பி விநாயகர் திருக்கோவிலில் இருந்து, பம்பை உடுக்கை மேளதாளம் முழங்க தீர்த்தக்குட ஊர்வலம் புறப்பட்டது.
அதன்பின், புற்றுக்கண் மாரியம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் நடைபெற்று, அம்மனுக்கு விஷேச அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. முன்னதாக, தீர்த்தக்குட ஊர்வலத்தில், அப்பகுதி பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.