பதிவு செய்த நாள்
10
ஆக
2019
02:08
புதுச்சேரி: பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில், மண்டலாபிஷேக பூர்த்தி விழா நாளை 11ம் தேதி நடக்கிறது.திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜ நேயர் கோவிலில் அமைந்துள்ள வலம்புரி மகாகணபதி, பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரிவேங்கடாசலபதி மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமிக்கு, கடந்த ஜூன் 23ம் தேதி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது.
கும்பாபிஷேகத்தின் மறுநாள் ஜூன் 24ம் தேதி முதல் 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடந்து வருகிறது. நாளை 11ம் தேதி, மண்டலாபிேஷகம் பூர்த்தி விழா நடக்கிறது.
விழாவை முன்னிட்டு, இன்று 10ம் தேதி, காலை 7:00 மணி முதல் பகவத் ப்ராத்தனை, சங்கல் பம், அக்னிமதனம், நவகலச ஸ்தபன ஹோமம், பூர்ணாஹூதி நடக்கிறது.நாளை 11ம் தேதி காலை கோ பூஜை மற்றும் ஹோமங்களும், காலை 8:00 மணி முதல் 9:00 மணிக்குள் அனை த்து சன்னதிகளுக்கும், 2000 லிட்டர் பால் மற்றும் மங்கள திரவியங்களால் சிறப்பு திருமஞ் சனம் நடக்கிறது.
தொடர்ந்து, பூர்ணாஹூதி மற்றும் கட திருமஞ்சனம் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு மேல் தாமல் ராமக்கிருஷ்ணனின், ’அனுமனும்- ராமனும்’ என்ற தலைப்பில் உபன்யாசம் நடக் கிறது. காலை 10:30 மணிக்கு மேல் சிறப்பு திருவாராதனம் முடிந்து, பக்தர்களுக்கு சிறப்பு பிரசா தம் வழங்கப்படுகிறது.மாலை 5:00 மணிக்கு ஸ்ரீசீதாராம திருக்கல்யாணம் நடக்கிறது.
பூஜைகள் அனைத்தும் பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் மூலம் நடத்தப்படுகிறது. பூஜையில் பங்கு பெற விரும்பும் பக்தர்கள், பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட்டை அணுகலாம்.ஏற்பாடுகளை ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கோதண்ட ராமன், செயலர் நரசிம்மன், பொருளாளர் கச்சபேஸ்வரன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.