பாகூர்: டி.என்.பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா நேற்று (ஆக., 9ல்) நடந்தது . தவளக்குப்பம் அடுத்துள்ள டி. என்.பாளையம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவி லில், செடல் பிரம்மோற்சவ விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சுவாமி வீதியுலாவும் நடந்து வந்தது. முக்கிய நிகழ்வான செடல் திருவிழா நேற்று (ஆக., 9ல்) நடந்தது. இதனையொட்டி, காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலை 5.00 மணிக்கு செடல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் செடல் போட்டு அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.