சிங்கம்புணரி:சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார், உறங்காபுலி கருப்பர் சுவாமிகளுக்கு ஆண்டுதோறும் ஆடி வெள்ளியில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம்.
சேவுகப்பெருமாள் கோயில் மண்டபத்தில் நடந்த அன்னதான விழாவில் சுற்றுவட்டார கிராமங் களை சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.காலை 9:00 மணிக்கு சேவுகப்பெருமாள் அய்யனார் மற்றும் உறங்காபுலி கருப்பர் சுவாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.