ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ் மங்கலம் மகான் புலவரப்பா தர்கா கந்தூரி விழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதைத் தொடர்ந்து உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும் மவுலவி நஜிமுதீன் ஆலிம் தலைமையில் சிறப்பு துவா நடைபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு நெய் சாதம் வழங்கி கந்துாரி விழா நிறைவு பெற்றது. இதையடுத்து விழா கமிட்டியாளர்கள் முன்னிலையில் சிறப்பு துவா ஓதி கொடியிறக்கம் செய்யப்பட்டது.