சின்னாளபட்டி:சின்னாளபட்டி அருகே கரியன்குளக்கரையில் தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தது.
பக்தர்கள் வழங்கிய கம்பு, கேழ்வரகு, அரிசி ஆகியவற்றை கலந்து கூழ் தயாரிக்கப்பட்டது. மண் பானையில் ஊற வைக்கப்பட்ட கூழ் நேற்று (ஆக., 9ல்) காலை கரைக்கப்பட்டது. சிறப்பு அபி ஷேகம், மகா தீபாராதனை நடந்தது. விசேஷ பூஜைகளுக்குப்பின் பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கல் நடந்தது.மேட்டுப்பட்டி, நடூர், தென்புதுார், கீழக்கோட்டை, ஜனதா காலனியில் சவு டம்மன் கோயில், செக்கடி தெரு சமயபுரம் மாரியம்மன் கோயில், ஜீவா நகர் சந்து மாரியம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.