பதிவு செய்த நாள்
10
ஆக
2019
03:08
சேலம்: திரளான பக்தர்களின், ’ஓம் சக்தி தாயே’ கோஷம் முழங்க, ’செவ்வை மாரி’ ஆடி தேரில் அசைந்தாடி வந்தது, மெய் சிலிர்க்க வைத்தது.
சேலம், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில், கடந்த ஜூலை, 12ல், முகூர்த்தக்கால் நடப்பட்டு, ஆடி தேர் திருவிழா தொடங்கியது. நேற்று, (ஆக., 9ல்) தேரோட்டம் நடந்தது. காலை, 5:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்து, முத்து கவச அலங்காரத்தில் காட்சியளித்தார்.
தொடர்ந்து, 45 அடி உயர தேருக்கு, சிறப்பு பூஜை செய்து, மஞ்சள் பட்டு உடுத்திய உற்சவர் அம்மனை, தேரில் எழுந்தருளச் செய்தனர். காலை, 10:23 மணிக்கு, எம்.எல்.ஏ., வெங்கடாசலம், வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை தொடங்கிவைத்தார். தொடர்ந்து, திரளான பக்தர்கள், தேரை இழுத்துச்சென்றனர்.
ஆடி தேரில், அசைந்தாடி வந்து, மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, வீதி யின் இருபுறமும், திரண்ட பக்தர்கள், ’ஓம் சக்தி தாயே’ என கோஷம் எழுப்பியது, மெய்சிலிர் க்க வைத்தது. பலர், தேர் மீது, மிளகு, உப்பு வீசி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
செவ்வாய்ப்பேட்டை பிரதான சாலை, அப்புசெட்டி தெரு, கபிலர் தெரு, பெரிய எழுத்துக்காரன் தெரு, சந்தைப்பேட்டை பிரதான சாலை, செவ்வாய்ப்பேட்டை பஜார் வழியாக நடந்த தேரோட் டம், மதியம், 3:00 மணிக்கு, நிலையை அடைந்தது. மேலும், அம்மாபேட்டை செங்குந்தர் மாரி யம்மன் கோவிலில், வண்டி வேடிக்கை நடந்தது. அதில், பிரம்மா, விஷ்ணு, சிவன் வேடமணி ந்தும், நாட்டின் விடுதலை குறித்து வேடமணிந்தும், பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
சாமிநாதபுரம், விநாயகர் மாரியம்மன் கோவிலில், உண்ணாமலை உடனுறை அண்ணாமலை யார் சுவாமி அலங்காரத்தில், தேரில் சுவாமிகள் உலா வந்தனர். ஓமலூர், பெரியமாரியம்மன் கோவிலில், அம்மன் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை, 108 திருவிள க்கு பூஜை நடந்தது.