பதிவு செய்த நாள்
11
ஆக
2019
04:08
காஞ்சிபுரம்:நாகலுாத்துமேடு நாக கன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவையொட்டி நேற்று, பெரியாயி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
காஞ்சிபுரம், நாகலுாத்துமேடு, நாக கன்னியம்மன் கோவில், ஐந்தாம் ஆண்டு ஆடித் திருவிழா, 7ம் தேதி துவங்கியது. நான்காம் நாளான நேற்று, காலை, அம்மனுக்கு மஹா அபிஷேகமும், பல வகை கனிகளால் சிறப்பு அலங்காரமும், சமபந்தி விருந்தும் நடந்தது.மாலை, 5:00 மணிக்கு அங்காள பரமேஸ்வரி ஊஞ்சல் சேவையும், 12 அடி நீளமுள்ள பெரியாயி அம்மன் அலங்காரம் நடந்தது.அதை தொடர்ந்து, திருவிளக்கு பூஜை நடந்தது. அம்மனிடம் வைத்து பூஜிக்கப்பட்ட மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, எலுமிச்சை பழம் உள்ளிட்டவை சுமங்கலி பெண்களுக்கு வழங்கப்பட்டன.