பதிவு செய்த நாள்
12
ஆக
2019
02:08
திருத்தணி:தொடர் விடுமுறையால், திருத்தணி மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் குவிந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.ஆடி மாதம் கடைசி வாரம் மற்றும் மூன்று நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, நேற்று (ஆக., 11ல்)அதிகாலை முதல், பக்தர்கள் வாகனங்களில் அதிகளவில் வந்தனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் குவிந்ததால், பொதுவழியில், நான்கு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். சிறப்பு வழியில், ஒன்றரை மணி நேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள், மலைக் கோவிலில் குவிந்ததால், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் அடைந் தது.
இதனால், திருத்தணி - அரக்கோணம் சாலையிலும் கடும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், நடந்து செல்லும் பக்தர்களும் கடும் சிரமப்பட்டனர்.நேற்று (ஆக., 11ல்), ஞாயிற்றுக் கிழமை என்பதால், மூலவருக்கு, அதிகாலை, 4:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.