சூலுார்:வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, சோமனுார் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில், ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சோமனுார், சேடபாளையம் ரோட்டில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி பண்டிகை பூஜை நடந்தது.ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக் கப்பட்டு, லட்சுமி அலங்கரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, அம்மன் ஊஞ்சல் சேவையும், வெள்ளிக்குப்பம் பாளையம் வேணு கான பஜனை குழுவினரின் வள்ளி கும்மி ஆட்டம் மற்றும் பஜனையும் நடந்தது.
* அரசூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடந்த அலங்கார பூஜையில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பெண் களுக்கு மாங்கல்ய சரடு, வளையல்கள், பூ மற்றும் மஞ்சள், குங்கும பிரசாதம் வழங்கப் பட்டது. ஏராளமான பெண்கள், பக்திப் பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர்.