Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ... பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அத்தி வரதர் வைபவம் ஆக., 16ம் தேதியுடன் நிறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2019
11:26

 காஞ்சிபுரம் : அத்தி வரதர் வைபவம், 17ம் தேதியோடு முடிவடைகிறது; அதில் எந்த மாற்றமும் இல்லை. 16ம் தேதியுடன், பக்தர்கள் தரிசனம் முடிகிறது, என, காஞ்சிபுரம் கலெக்டர், பொன்னையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் நடைபெறும் அத்தி வரதர் வைபத்திற்கு, ஜூலை, 1ம் தேதி முதல், தினமும், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, சுவாமியை தரிசிக்கின்றனர். நேற்று, தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர ராவ் மற்றும் அவரது குடும்பத்தினரும், ஆந்திரா மாநில, எம்.எல்.ஏ.,வும், நடிகையுமான, ரோஜா தரிசித்தனர். நேற்றைய தரிசனத்தின்போது, 13 பேர், கூட்ட நெரிசலில் சிக்கி, மயக்கமடைந்தனர். அவர்களுக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதேபோல், வி.வி.ஐ.பி., வரிசையில் சென்ற பக்தர்களிடையே, வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பானது. இதில், இரு பக்தர்கள் காயம் அடைந்து, அங்குள்ள மருத்துவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில், அத்தி வரதர் வைபவ நாட்கள் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து, கலெக்டர், பொன்னையா, நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர், இ.பி.எஸ்., கூறியபடி, 17ம் தேதியோடு, அத்தி வரதர் வைபவம் முடிகிறது. கால நீட்டிப்பு செய்ய வாய்ப்பு இல்லை.

அனந்தசரஸ் குளத்திற்கு, அத்தி வரதரை எடுத்துச் செல்ல, 17ம் தேதி ஏற்பாடு செய்யப்படும். பக்தர்கள் தரிசனம் செய்ய, 16ம் தேதி கடைசி நாளாகும். பக்தர்கள் கூட்டம் அதிகமாகி வருவதால், மூன்று இடங்களில், பிரமாண்ட தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வந்தவாசி, உத்திரமேரூரிலிருந்து வரும் வாகனங்கள், கீழ்கதிர்பூரில் உள்ள, பி.ஏ.வி., பள்ளிக்கு அருகில் வாகனங்களை நிறுத்தலாம். சென்னை, அரக்கோணம், வேலுார் ஆகிய இடங்களில் இருந்து வரும் வாகனங்கள், கீழ்கதிர்பூரில் உள்ள, எஸ்.ஆர்.எம்., பங்க் அருகில் நிறுத்த, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

வாலாஜாபாதிலிருந்து வரும் வாகனங்கள், பச்சையப்பன் கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தங்குமிடம் அருகில், வாகனங்களை, பார்க்கிங் செய்யலாம். நிறுத்துமிடங்களில், உணவு, குடிநீர், கழிப்பறை, டிவி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள், பஸ் மூலம், கோவிலுக்கு அனுப்பி வைக்கப்படுவர். பஸ்சில் செல்ல கட்டணமா அல்லது இலவசமா என, பின் தெரிவிக்கப்படும். பாதுகாப்பு பணியில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதுவரை, 80 லட்சம் பக்தர்களுக்கு மேல், அத்தி வரதரை தரிசித்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார். போக்குவரத்து துறை முதன்மை செயலர், ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையம் அமைந்துள்ள, பெரியார் நகர், ஓரிக்கை உள்ளிட்ட இடங்களில், நேற்று பார்வையிட்டார். அத்தி வரதர் தரிசனத்திற்கு கூடுதல் பஸ்கள் முறையாக இயக்கப்படுகிறதா உள்ளிட்டவை குறித்து, ஆய்வு செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
காஞ்சிபுரம், காஞ்சி அத்தி வரதர் வைபவம், நேற்றுடன் நிறைவு பெற்றது. வரதராஜ பெருமாள் கோவிலில், அனந்தசரஸ் ... மேலும்
 
temple
சபரிமலை, :கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான சபரிமலை, மாளிகைப்புறத்திற்கான புதிய ... மேலும்
 
temple
திண்டிவனம்: திண்டிவனத்தில் ராகவேந்திரர் சுவாமிகளின் 348வது ஆராதனை விழா நடந்தது.

திண்டிவனம் ... மேலும்
 
temple
 புதுச்சேரி: வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம் நேற்று நடந்தது. ... மேலும்
 
temple
பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டியில் எழுபது ஆண்டுகளுக்கு முன்  பாலசுப்பிர மணிய சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.