பதிவு செய்த நாள்
13
ஆக
2019
02:08
கமுதி:கமுதி அருகே வேண்டுதல்களைநிறைவேற்ற வேண்டிமாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து வந்த பக்தர்கள் தற்காலிக கூரை குடில்களை அமைத்து மண் பானையில் சமையல் செய்து மும்முறை வழிபட்டு வருகின்றனர்.
கமுதி - முதுகுளத்துார் வழியில் உள்ளகருங்குளம்சந்தனமாரியம்மன் கோயில்ஆடி பொங் கல் விழா ஆக.,9 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 48 நாட்கள்விரதம் இருந்து முதுகுளத் துார், கமுதி, கடலாடி, உத்தரகோசமங்கை, ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பக்தர்கள் குழந்தை வரம்வேண்டியும், நோய் தீரவும்,அரசு வேலை, குடும்ப கஷ்டம், திருமண பாக்கியம் வேண்டி காப்பு கட்டுதல் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே கோயில், அருகேயுள்ள குண்டாறு கரைகளில் தற்காலிக குடில்கள் அமைத்து, மண் பானைகளில் சமையல் செய்து, மாலை அணிந்து, பக்தர்கள் விரதமிருந்து வருகின்றனர்.
குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் கரும்பாலை தொட்டில் கட்டியும்,நோய் நொடிகள் தீர சேத்தாண்டி வேடம், குடும்ப கஷ்டங்கள் தீர அக்னி சட்டி, பகை, கஷ்டங்கள் தீரவும்பொங்கல் வைத்து, கிடாய் வெட்டி பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்த ஆபத்து,கஷ்டங்களையும் பொருட் படுத்தாமல்தற்காலிக குடில்களில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர்.ஆக.,17 ல்நடக்கும் பால் குடம், பூக்குழி திருவிழாவுக்காக பக்தர்கள் 48 நாள் விரதமிருந்து ரோட்டோரம், குண்டாறு கரையோரம், கோயில் வளாகங்களில் தற்காலிக குடில்களில் தங்கி நேர்த்தி கடன்களை செலுத்துவது, ஆண்டுதோறும் ஆடி மாதங்களில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.