பதிவு செய்த நாள்
13
ஆக
2019
02:08
ராமேஸ்வரம்:உலக யானைகள் தினத்தையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலெட்சுமியை அரசுப் பள்ளி மாணவர்கள் உபசரித்தனர்.
தந்தங்களுக்காக யானைகளை வேட்டையாடுதல், வழித்தடத்தை அழித்தல், சுற்றுசூழல் பாதிப்பால் அழிவின் விளிம்பில் உள்ள யானைகளை பாதுகாக்க வலியுறுத்தி 2012 ஆக.,12ல் கனடாவை சேர்ந்த வில்லியம் சாட்னர் என்பவர் ’வனத்திற்குள் திரும்பு’ எனும் ஆவணப்பட த்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.இப்படம் வெளியான நாளை (ஆக., 14ல்) உலக யானைகள் தினமாக கொண்டாட ஐ.நா சபை அறிவித்தது.
அதன்படி நேற்று (ஆக., 12ல்) ராமேஸ்வரம் அரசு பள்ளி என்.எஸ்.எஸ்., என்.சி.சி., ரெட்கிராஸ் மாணவர்கள்,ஆசிரியர்கள் ஜெயகாந்தன், பழனிச்சாமி, தினகரன், நுகர்வோர் இயக்க செயலர் களஞ்சியம், கம்பன் கழக பொருளாளர் ராமு உட்பட பலர் யானைகளை பாதுகாக்க வலியு றுத்தி ஊர்வலமாக புறப்பட்டு திருக்கோயில் யானை ராமலெட்சுமிக்கு வாழைப் பழம், தேங்காய் கொடுத்து உபசரித்தனர்.