பதிவு செய்த நாள்
13
ஆக
2019
03:08
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் நடந்த சோமவார பிரதோஷ வழிபாட்டில், போலீஸ் டி.ஐ.ஜி., ஈஸ்வர் சிங் தரிசனம் செய்தார்.பாகூரில் உள்ள வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், சோமவார பிரதோஷ வழிபாடு நேற்று (ஆக., 12ல்) நடந்தது.
இதனையொட்டி, காலை 9.00 மணிக்கு மூலநாதர், வேதாம்பிகையம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு பிரதோஷ வழிபாடு துவங்கியது.நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம், விபூதி, இளநீர், பன்னீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை நடந்தது.இதில், புதுச்சேரி போலீஸ் டி.ஐ.ஜி. ஈஸ்வர் சிங் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். கோவிலை வலம் வந்து, ஒவ்வொரு சன்னதியிலும் சாமி தரிசனம் செய்த அவர்,கோவிலின் வரலாறு குறித்து, அர்ச்சகர்கள் சங்கரநாராயணன், பாபு ஆகியோரிடம் கேட்டறிந்தார். சாமி தரிசனம் முடித்து விட்டு, இரவு 7.00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.